2 C
New York
Monday, December 29, 2025

நெடுஞ்சாலை ஓய்விடங்களில் விரைவு சார்ஜ் நிலையங்கள்.

2030 ஆம் ஆண்டிற்குள் பெரும்பாலான நெடுஞ்சாலை ஓய்விடங்களில், மின்சார கார்களுக்கு விரைவாக சார்ஜ் செய்யும் நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான ஓய்விடங்களிலும், சில புதிய இடங்களிலும் இந்த விரைவு சார்ஜிங் வசதிகள் பொருத்தப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 100 ஓய்விடங்களும் விரைவாக சார்ஜ் செய்யும் நிலையங்களைக் கொண்டிருக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல், போக்குவரத்து, ஆற்றல் மற்றும் தகவல் தொடர்புத் துறை (Uvek)  தெரிவித்துள்ளது.

எனினும், இது அனைத்து ஓய்விடங்களுக்கும்  பொருந்தாது, என்றும், பெரும்பாலான இடங்களில் இந்த வசதிகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் சுவிட்சர்லாந்தில் 20,000 பொதுவில் அணுகக்கூடிய சார்ஜ் நிலையங்களை அமைப்பது,  மத்திய சுற்றுச்சூழல், போக்குவரத்து, ஆற்றல் மற்றும் தகவல் தொடர்புத்துறையின் “எலக்ட்ரோமொபிலிட்டி நெடுஞ்சாலை வரைபடத்தில்” குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளில் ஒன்றாக இருக்கிறது.

நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் விரைவு சார்ஜ் செய்யும் நிலையங்கள் இதன் ஒரு பகுதியாக இருக்கும்.

மூலம் -Zueritoday

Related Articles

Latest Articles