ஜப்பானிய வண்டுகள் (Japanese beetles) என்ற பூச்சியினத்தை அழிக்கும் முயற்சியில் சுவிற்சர்லாந்து அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த வண்டுகள் அண்மைக்காலமாக சுவிசில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த பூச்சிகள் சூரிச் நகரின் ஒரு பகுதியில் மட்டுமே இன்னமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வண்டுகள், சூரிச் விமான நிலையத்திற்கு பரவாமல் தடுக்க, சூரிச் கன்டோன் அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து வருகின்றனர்.
விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த வண்டுகளின் பரவலை தடுக்கும் வகையில் இந்தப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மூலம் -zueritoday

