நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார்-2 படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் சர்தார் -2 படத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் படப்பிடிப்பு நடந்து வந்தது.
சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது, 20 அடி உயரத்தில் இருந்து ஏழுமலை என்ற சண்டை பயிற்சியாளர் தவறி விழுந்தார்.
அப்போது, அவர் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் அணியவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனால், மார்பு பகுதியில் அடிபட்ட அவருக்கு , நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

