ஜெனீவா விமான நிலையம் அடுத்த ஆண்டு ஒலி உமிழ்வுகளுக்கு எதிராக ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதற்கமைய, இரவு 10 மணிக்குப் பின்னர் தாமதமாகப் புறப்படும் விமானங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
ஐரோப்பிய விமானங்களுக்கு, 5,000 முதல் 20,000 பிராங்குகளும், ஏனைய கண்டங்களுக்கு இடையேயான விமானங்களுக்கு 10,000 முதல் 40,000 பிராங்குகள் வரையும் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் என, ஜெனீவா விமான நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா விமான நிலையம் கடந்த ஆண்டு முதல் கட்டணமின்றி இந்த அமைப்பை சோதித்து வருகிறது.
அதன் பின்னர் தாமதமாக புறப்படும் விமானங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
அதற்கேற்ப விமான நிறுவனங்கள் தங்களது விமான அட்டவணையை மாற்றி அமைத்துள்ளன. விமானத்தின் சத்தம் குறைந்து விட்டது என்றும், விமான நிலைய பணிப்பாளர் கூறினார்.
மூலம் – Theswisstimes

