20.3 C
New York
Saturday, June 21, 2025

பேர்ன் பொலிசாரின் தேடுதலில் சிக்கிய ஒரு தொன் போதைப்பொருட்கள்.

இந்த வாரம் Bern மற்றும் Fribourg கன்டோன்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ஒரு தொன் ஹாஷிஷ் மற்றும் கஞ்சா பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, பலர் கைது செய்யப்பட்டனர் என்று பேர்ன் பொலிசார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான அவர்களின் நடவடிக்கைக்கு, Fribourg கன்டோனல் பொலிசார் ஆதரவு வழங்கியிருந்தனர். இதன்போது வாகனங்களும் சோதனையிடப்பட்டன.

ஹாஷிஷ் மற்றும் கஞ்சாவைத் தவிர, ஒன்பது கிலோகிராம் எம்.டி.எம்.ஏ மாத்திரை வடிவத்திலும் (எக்ஸ்டஸி) தூளாகவும் கண்டுபிடிக்கப்பட்டது,

அத்துடன் பல நூறு கிராம் கோகோயின் மற்றும் சில amphetamine ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களை முன் விசாரணைக் காவலில் வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பேர்ன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம் –The swiss times

Related Articles

Latest Articles