-0.1 C
New York
Sunday, December 28, 2025

சுவிசில் பிரபலமாகியுள்ள கலப்பு வகை கார்கள்.

இந்த ஆண்டின் முதல் பாதியில் பதிவு செய்யப்பட்ட சுமார் 58 வீதமான  புதிய கார்கள், கலப்பு வகையை அல்லது, மின்சார கார் வகைகளைச் சேர்ந்தவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Auto Schweiz இன் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மின்சார மோட்டார் மற்றும் எரிப்பு இயந்திரம் கொண்ட கலப்பு வகை வாகனங்கள் பிரபலமாக உள்ளன.

இந்த ஆண்டின் முதல் பாதியில், புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் கிட்டத்தட்ட 32 வீதமானவை, கலப்பு வகையைச் சேர்ந்தவை.

முந்தைய ஆண்டை விட இவை இந்த ஆண்டில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஆண்டின் முதல் பாதியில் 18 வீதத்துக்கும் குறைவான புதிய பதிவுகளைக் கொண்ட மின்சார கார்களின் சந்தை பங்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கையை விட சற்று குறைவாக இருந்தது.

மூலம் – swissinfo

Related Articles

Latest Articles