-0.1 C
New York
Sunday, December 28, 2025

விவசாய விபத்துகளில் 12 பேர் பலி.

சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டு விவசாய விபத்துகளில் இதுரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

6 முதல் 9 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள் வாகனங்கள் அல்லது இயந்திரங்கள் தொடர்பாக விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் விவசாய விபத்து தடுப்பு சேவை தெரிவித்துள்ளது.

உழவு இயந்திரம் அல்லது  இழுவை உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர்.

மற்றொருவர் பொருத்தப்பட்ட கருவியில் சிக்கியதில் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

வாயு விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இரண்டு பேர் கூரை அல்லது வைக்கோல் மாடியில் இருந்து விழுந்து இறந்தனர்.

மேலும் ஒருவர் குதிரைக் கூடத்தில் உயிரற்ற நிலையில் சடலமாக காணப்பட்டார்.

விவசாய விபத்துகள்அபாயங்கள் பெரும்பாலும் குறைவாகவே உணரப்படுகின்றன, குறைத்து மதிப்பிடப்படுகின்றன அல்லது புறக்கணிக்கப்படுகின்றன.

விவசாயத்தில் பணிபுரியும் மக்களுக்கு கண்ணுக்கு தெரியாத ஆபத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்த விரும்புவதாக உயிரிழந்துள்ளதாக சுவிஸ் விவசாய விபத்து தடுப்பு சேவை தெரிவித்துள்ளது.

மூலம் – swissinfo

Related Articles

Latest Articles