1.6 C
New York
Saturday, February 14, 2026

உறங்கிக் கொண்டிருந்த இளம் தம்பதி முன் முகமூடிக் கொள்ளையன்

Endingen இல், குடியிருப்புக் கட்டடத் தொகுதி ஒன்றில் இன்று அதிகாலை முகமூடி அணிந்த ஒருவர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

வீடு ஒன்றில் இளம் தம்பதியினர் உறங்கிக் கொண்டிருந்த போது, அவர்கள் முன்பாக திடீரென கத்தியுடன் தோன்றிய முகமூடிக் கொள்ளையன், அவர்களை மிரட்டி குளியலறைக்குள் வைத்துப் பூட்டி விட்டு வீட்டில் இருந்த பணம் மற்றும் அலைபேசிகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் குளியலறை யன்னலின் ஊடாக தப்பித்த கணவன், Aargau கன்டோனல் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அவர்கள் விரைந்து சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

முகமூடிக் கொள்ளையன், 16 தொடக்கம் 25 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாம் என்றும் 175 சென்டி மீற்றர் உயரம் கொண்டவர் என்றும் இளம் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

மூலம் – 20min

Related Articles

Latest Articles