0.8 C
New York
Monday, December 29, 2025

விமானி உடல்நிலை பாதிப்பு – சூரிச்சில் அவசரமாக தரையிறங்கிய விமானம்.

 Edelweiss Air விமானத்தின் விமானிகளில் ஒருவர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், விமானம் சூரிச் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இன்று காலை Tampa Bay இல் இருந்து சூரிச் நோக்கிப் பயணித்த WK5  விமானத்தின் மூன்று விமானிகளில் ஒருவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து. அந்த விமானம் அவசரமாக சூரிச் விமான நிலையத்தில் 90 நிமிடங்கள் முன்னதாகவே தரையிறக்கப்பட்டது.

ஏனைய இரு விமானிகளும் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கியதாக Edelweiss Air நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles