18 C
New York
Friday, September 12, 2025

500 ஆவது ஆண்டு விழா – 4 நாட்கள் களை கட்டப் போகும் மிசொக்ஸ்.

Graubündenஇன் 500வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மூன்றாவது உடன்படிக்கை திருவிழா ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை Misoxஇல்  நடைபெறவுள்ளது.

அண்மைய வெள்ளத்தினால், சேறும் சகதியுமாக உள்ள Misoxஇல் இந்த நான்கு நாள் திருவிழா நடைபெறுகிறது.

San Vittore மற்றும் Roveredo ஆகிய இரண்டு நகராட்சிகளும் இந்த தேசிய திருவிழாவில் இணைந்துள்ளன. தேசிய, சமய மற்றும் வரலாற்று பின்னணி கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த நான்கு நாட்களும் நடைபெறும் என Graubunden கன்டோன் நேற்று அறிவித்துள்ளது.

1524 ஆம் ஆண்டில், மூன்று பிராந்தியங்கள் ஒன்றிணைந்து சுதந்திர அரசை உருவாக்கியதுடன், ஒரு கூட்டாட்சி சாசனத்தில் கையெழுத்திட்டது.

இது இன்றைய Graubünden கன்டோனின் முன்னோடியாகும்.

மூலம் – Theswisstimes

Related Articles

Latest Articles