20.8 C
New York
Sunday, June 21, 2026

குடியிருப்பு, வர்த்தக கட்டடத்தில் தீ விபத்து.

Schwyz கன்டோனில் Einsiedeln இல் உள்ள Schwanenstrasse இல் குடியிருப்பு மற்றும் வர்த்தக கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து அந்தக் கட்டடத்தில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் இரவைக் கழிக்க நேரிட்டது.

கூரை  வழியாக கடும் புகை வெளிவந்து கொண்டிருந்த நிலையில், தீயணைப்புப் பிரிவினர் விரைந்து சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவிபத்துக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles