19.4 C
New York
Friday, May 15, 2026

ஏடிஎம் வெடி வைத்து தகர்ப்பு – பணத்துடன் தப்பிய மர்ம நபர்கள்.

Vaud கன்டோனில் உள்ள ஏடிஎம் இயந்திரம் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்கள் வெடிக்கச் செய்துள்ளனர்.

Rue Centrale இல் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் இந்த வெடிப்பு ஏற்பட்டது.

இந்த வெடிப்பினால், ஏடிஎம் மற்றும் கட்டடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடிவிட்டனர்.

ஏடிஎம்மில் இருந்து திருடப்பட்ட பணத்தின் அளவு தெரியவில்லை என்று பொலிஸ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் சமஷ்டி சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டு, Fedpol மற்றும் Vaud கன்டோனல் பொலிசாருடன் இணைந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜூலை 4 ஆம் திகதி  Vaud கன்டோனில் இதுபோன்ற ஒரு  ஏடிஎம் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.

இத்தகைய தாக்குதல்கள் சுவிசில் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளன, 2022 இல் சுவிட்சர்லாந்தில் இவ்வாறான 52 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று Fedpol தெரிவித்துள்ளது.

Jura, கன்டோனில் இந்த ஆண்டு இடம்பெற்ற பல ஏடிஎம் வெடிப்பு சம்பவங்களை அடுத்து, Jura, மற்றும் Neuchâtel கன்டோனல் வங்கிகள் பல ஏடிஎம்களை மூடியுள்ளன.

மூலம் – Swissinfo

Related Articles

Latest Articles