24.2 C
New York
Sunday, June 22, 2025

சுவிஸ் நாடாளுமன்றத்தில் சமத்துவமற்ற பிரதிநிதித்துவம்.

சுவிற்சர்லாந்தின் மக்கள் தொகையில் 34 சதவீதமானோர், எந்த மதத்தையும் பின்பற்றாதவர்களாக இருந்தாலும்,  நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மதம் அல்லாதவர்கள் மிகப்பெரிய குழுவாக இருந்தாலும், அவர்கள் 23 சதவீத பிரதிநிதித்துவத்தையே கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடமே கிடைத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அதிகளவாக, ரோமன் கத்தோலிக்கர்கள் 40 சதவீதம் இடம்பெற்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து சீர்திருத்த தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள், 32 சதவீதம் பேர் இடம்பெற்றுள்ளதாக, பேர்ன் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாநிலங்களின் அவையில், கத்தோலிக்கர்கள் 56 சதவீதத்துடன், பெரும்பான்மையாக உள்ளனர். 21 சதவீதமானோர், புரட்டஸ்தாந்து மதத்தையும், 13 சதவீதமானோர், மதப்பிரிவு அல்லாதவர்களாகவும் இருக்கின்றனர்.

தேசிய சபையில், சுமார் 37 சதவீதம் பேர் ரோமன் கத்தோலிக்கர்கள் என்றும், 25 சதவீதம் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்களும் மிகக் குறைவாகவே உள்ளனர்.

மக்கள் தொகையில் 6 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் முஸ்லிம்களாக அடையாளம் காணப்பட்டாலும்,அவர்களுக்கு சுமார் 1 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles