-0.2 C
New York
Tuesday, December 30, 2025

ட்ராம் மீது மோதிய மோட்டார் சைக்கிள் – தடைப்பட்ட போக்குவரத்து.

Gessnerallee அருகே Stauffacher மற்றும் Sihlstrasse இடையே நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில், ஒரு மோட்டார் சைக்கிள் டிராம் மீது மோதியதாக,  ​​சூரிச் நகர பொலிசார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் காயமடைந்தார்.

இந்த விபத்தின் காரணமாக, Geissweid மற்றும் Heuried திசையில் Paradeplatz  தொடக்கம் Stauffacher வரையான, 2 மற்றும் 9 டிராம் பாதைகள் தற்காலிகமாக தடைப்பட்டன.

நேற்று மாலை, 4:30 மணிக்கு, வாகனப் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles