-0.2 C
New York
Tuesday, December 30, 2025

அவசரமாக நிறுத்தியதால் பேருந்தில் இருந்த 5 பயணிகள் காயம்.

Zugerland பொதுப் போக்குவரத்து பேருந்து ஒன்றை அதன் சாரதி அவசரமாக நிறுத்தியதால், 5 பயணிகள் காயம் அடைந்தனர்.

நேற்றுமுன்தினம் காலை 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

ஒரு வாகனம் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு ஒளிர்வதற்கு சற்று முன்னர், பேருந்து பாதையில் நுழைந்தது.

இதனால் பேருந்தை சாரதி அவசர அவசரமாக நிறுத்தினார்.இதனால் பேருந்தில் இருந்த 5 பயணிகள் காயமடைந்தனர்.

அவர்களின் மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles