சூரிச் நகரில், Pfingstweid பாலத்தில் நேற்றுப் பிற்பகல் தவறான வழியில் வாகனத்தைச் செலுத்திய ஒருவரால், பல வாகனங்கள் விபத்தில் சிக்கின.
இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்துடன், நான்கு வாகனங்கள் சேதமடைந்தன.
மாவட்டம் 9இல் நேற்றுப் பிற்பகல் 4 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
44 வயதுடைய சாரதி ஒருவர் சட்டவிரோதமாக விநியோக வாகனம் ஒன்றை நகரை நோக்கிச் செலுத்திய போது, Pfingstweid பாலத்தில் கார் ஒன்றுடன் மோதினார்.
அதன் பின்னர் மேலும் இரண்டு வாகனங்கள் விபத்தில் சிக்கி சேதமடைந்தன.
இந்த விபத்தை அடுத்து தவறான வழியில் வாகனத்தை செலுத்திய சாரதி உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தினால் நேற்றிரவு 8.30 மணிக்குப் பின்னரே Pfingstweid பாலம் வழியான போக்குவரத்து மீளவும் அனுமதிக்கப்பட்டது.
மூலம் – zueritoday

