சுவிட்சர்லாந்தில் கோவிட் -19 தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
சுவிட்சர்லாந்து தற்போது கோவிட்-19 இன் கோடை அலையை எதிர்கொண்டுள்ளது.
தற்போதைய திரிபுகள் கடுமையானவை அல்ல என்றாலும், சிலர் இன்னும் தடுப்பூசி போட விரும்புகிறார்கள்.
இருப்பினும், சுவிஸ் மருந்தகங்கள் மற்றும் மருத்துமனைகள், தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.
கோவிட்-19 தடுப்பூசிக்கான பொறுப்பு இப்போது மாற்றப்பட்டுள்ளது. இது வரை, அதனை கூட்டமைப்புதான் கையாண்டு வந்தது. அவர்கள் தடுப்பூசிகளுக்கு முன்பதிவு செய்து, செலவில் ஒரு பகுதியை ஈடுகட்டினர்.
ஆனால், ஜூலை 1 ஆம் திகதி முதல், கோவிட்-19 தடுப்பூசிகள் சந்தை சக்திகளின் கைகளுக்கு வந்துள்ளது.
இதனால், மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் தங்கள் நோயாளிகளுக்கு நேரடியாக மருந்துகளை முன்பதிவு செய்ய வேண்டும். இதனால் தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளன.
கூட்டமைப்பால் வாங்கப்பட்ட தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கு சட்டரீதியானதல்ல என்றும், மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் தங்கள் வசம் உள்ள மருந்துகளை அப்புறப்படுத்துமாறும் பெடரல் பொது சுகாதார அலுவலகம் (FOPH) கூறியுள்ளது.
எஞ்சியுள்ள தடுப்பூசிகள் கூட்டமைப்பால் நடத்தப்படும் அவசர காப்பகத்தில் வைக்கப்படும். அவை காலாவதியாகாத வரை, பெரிய கோவிட் வெடிப்பு ஏற்பட்டால் பயன்படுத்தப்படலாம்.
அதேவேளை, சுகாதார வழங்குநர்கள் இப்போது புதிய தடுப்பூசிகளை முன்பதிவு செய்ய வேண்டும்.
தற்போது, மொத்த விற்பனையாளர்களிடம் தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால், அவர்களால் வழக்கமான வழிகளைப் பயன்படுத்த முடியாது.
மே அல்லது ஜூன் மாதத்தில் தான் இந்த பொறுப்புமாற்றம் அறிவிக்கப்பட்டதால், முன்பதிவு செய்ய போதுமான நேரம் இல்லை என்று சுகாதார வழங்குநர்கள் கூறுகின்றனர்.
மருத்துவ ஊசிக்கான செலவு மற்றும் சுகாதார வழங்குநருக்கான கட்டணம் தவிர, ஒவ்வொரு தடுப்பூசிக்கும் சுமார் 80 பிராங் செலவாகும்,ஆபத்தில் உள்ள நபர்களுக்கு மட்டுமே இந்த செலவுக்கான உதவி வழங்கப்படும்.
தடுப்பூசி போட விரும்பும் ஏனையவர்கள், தாங்களாகவே பணம் செலுத்த வேண்டும்.
மருத்துவ நடைமுறைகள் மற்றும் மருந்தகங்கள் எவ்வளவு நோயாளிகள் பணம் செலுத்தத் தயாராக இருப்பார்கள் என்பதைக் கணக்கிடுவது கடினமாக உள்ளதாகவும் சுகாதார வழங்குநர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம் – swissinfo

