-0.9 C
New York
Saturday, February 14, 2026

6400 சதுர மீட்டர் இராட்சத சுவிஸ் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

சுவிஸ் தேசிய விடுமுறை  தினம்,மற்றும் Säntis-Schwebebahn இன் 89வது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று Säntis இல் இதுவரை இல்லாதளவில்,  மிகப்பெரிய சுவிஸ் கொடி ஏற்றப்பட்டது.

இந்தக் கொடியின்  மொத்த பரப்பளவு 6400 சதுர மீட்டர் ஆகும்.

700 கிலோ எடை கொண்ட இந்த கொடியை தைக்க சுமார் 60 கிலோ மீற்றர் நீளமான நூல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றுக்காலை 9.30 மணிக்கு கொடியேற்றம் தொடங்கி சுமார் இரண்டு மணி நேரம் நடந்தது. இதற்கான பணியில் 25 பேர் ஈடுபட்டனர்.

நேற்றும் இன்றும், சமையல் மகிழ்ச்சி மற்றும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 3 ஆம் திகதி இந்தப் பாரிய சுவிஸ் கொடி மீண்டும் சுருட்டப்பட உள்ளது.

கடந்த ஆண்டு இந்த கொயை ஏற்றுவதற்கு திட்டமிட்ட போதும்,  வானிலை மோசமாக இருந்ததால்,  கொடி ஏற்றப்படவில்லை.

மூலம்- 20min

Related Articles

Latest Articles