சுவிட்சர்லாந்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகல் மீண்டும் சூறைக்காற்றுடன் மழை கொட்டியது.
இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.
Oberhallau இல், வெள்ளத்தில் கார்களும் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hallau வில் 56 மில்லி மீற்றர் மழை கொட்டியதால் வீதிகள் எங்கும் வெள்ளமாக காணப்பட்டது.
Hallau, Oberhallau, Gächlingen, Neunkirch மற்றும் Siblingen பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக Schaffhausen பொலிசார் தெரிவித்தனர்.
மூலம்- 20min

