-0.2 C
New York
Tuesday, December 30, 2025

தடைப்பட்ட ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

சூரிச் – Winterthur  இடையிலான, ரயில் போக்குவரத்து கட்டுப்பாடுகளின்றி மீண்டும் இயங்குவதாக, SBB வெள்ளிக்கிழமை மாலை அறிவித்தது.

மேல்நிலை மின்பாதையில் ஏற்பட்ட சேதங்களால், சூரிச் பிரதான ரயில் நிலையத்துக்கும் Winterthur  இற்கும் இடையேயான ரயில் போக்குவரத்து  தடைபட்டது.

இதனால் பல்வேறு S-Bahn இணைப்புகள் மட்டுமின்றி நீண்ட தூர போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

சூரிச் மற்றும் St. Gallen இடையே போக்குவரத்து இணைப்புகளையும் இது பாதித்ததாக நேற்று பிற்பகல் SBB கூறியது.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles