சூரிச் நோக்கி வந்து கொண்டிருந்த யூரோசிட்டி ரயில் ஜேர்மனியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சுமார் 300 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த ரயில், Baden-Württemberg இற்கு தென்கிழக்கே, மரத்தில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இதையடுத்து சுவிஸ் ரயில்வேயின் மீட்பு பிரிவு விரைந்து சென்று மரத்தை அகற்றி ரயில் தொடர்ந்து பயணிக்க வழியமைத்தது.
இதனால் 1 மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
மூலம்- 20min

