Kandertal இல் உள்ள Mülenen இல் நேற்று பிற்பகல் நான்கு கார்கள் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த வீதியை பல மணி நேரம் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
நேற்று மாலை 5.35 மணியளவில் Mülenen இருந்து Reichenbach நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு ஓட்டுநர், எதிர் பாதையில் வந்து, எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதினார்.
இதையடுத்து அடுத்தடுத்து மேலும் இரண்டு கார்கள் மோதின.
இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர் என்று பேர்ன் பொலிசார் தெரிவித்தனர்.
மூலம்- zueritoday

