சுவிட்சர்லாந்தின் சில்லறை விற்பனையாளர்கள் பார்பிகியூ பருவத்தில், இறைச்சி நுகர்வை ஊக்குவிப்பதாக WWF சுவிட்சர்லாந்து சுற்றுச்சூழல் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, சமீபத்தில் விலை குறைக்கப்பட்ட பார்பிகியூ தயாரிப்புகளில் 80வீதம் இறைச்சியை அடிப்படையாக கொண்டதாகும்.
இது குறைந்த விலையில், 51வீதம் வரை விலைக்கழிவுடன் வழங்கப்பட்டது.
அனைத்து சில்லறை விற்பனையாளர்களும் இலக்குகளை நிர்ணயித்திருந்தாலும், நடைமுறையில் இறைச்சிக்கு, கிட்டத்தட்ட குப்பையாக மாறும் அளவிற்கு விலைகழிவு வழங்கப்படுகிறது என்று WWF தெரிவித்துள்ளது.
இதனுடன் ஒப்பிடுகையில், 6 வீத விளம்பரங்கள் மட்டுமே தாவர அடிப்படையிலான பர்கர்கள் அல்லது சொசேஜஸ்களுக்கு செய்யப்படுகிறது.
சைவ பார்பிகியூ தயாரிப்புக்கான அதிகபட்ச தள்ளுபடி 38 வீதம் ஆகும்.
“ல்லறை விற்பனையாளர்கள் தங்கள் விளம்பர உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் காலநிலையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த நிலையான, தாவர அடிப்படையிலான மாற்றுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்று WWF உணவு நிபுணர் மரியல்லா மேயர் தெரிவித்துள்ளார்.
மூலம்- Swissinfo

