5.3 C
New York
Tuesday, December 30, 2025

புகலிடக் கோரிக்கையாளரின் குடியிருப்பு கொள்கலனில் தீ.

சூரிச்சின் Buchs இல் நேற்று பிற்பகல் புகலிடக் கோரிக்கையாளரின் குடியிருப்பு கொள்கலன் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த கொள்கலன், Buchs பழைய ரயில் நிலைய மைதானத்தில் உள்ள புகலிட விடுதிக்கு சொந்தமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த தீவிபத்தினால் இரட்டை குடியிருப்பு கொள்கலன் முற்றாக எரிந்தது.

இதனால் பழைய ரயில் நிலையத்துக்கும் சேதம் ஏற்பட்டது.

அந்த கொள்கலன் குடியிருப்பில் புகலிடக் கோரிக்கையாளர்கள் 3 பேர் தங்கியிருந்த போதும், அவர்கள் உடனடியாக வெளியேதால் காயங்களின்றி தப்பினர்.

அவர்களுக்கு மாற்று இருப்பிட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

எனினும், பத்தாயிரக்கணக்கான பிராங் சொத்து இந்த தீவிபத்தில் நாசமாகியுள்ளது.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles