சுவிட்சர்லாந்தில் ஆண்டு பணவீக்கம் ஜூலை மாதத்தில் மாறாமல் இருந்தது என, மத்திய புள்ளியியல் அலுவலகம் (FSO) தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் பணவீக்கம், ஜூன் மாதத்தில் இருந்ததைப் போல, 1.3 சதவீதமாக இருந்தது.
அதேவேளை, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை விட இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சுவிஸ் நுகர்வோர் பொருட்களின் விலை சராசரியாக 1.3% அதிகமாக இருந்தது.
உள்நாட்டு பொருட்களின் விலை 2.0% அதிகமாக இருந்தாலும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை 2023 ஜூலையை விட 1.0% குறைவாக உள்ளது.
மூலம்- Theswisstimes

