Lucerne இல் உள்ள Rain மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் ஒரு வாகன தரிப்பிடம் தீப்பிடித்து எரிந்தது.
வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர்.
நள்ளிரவு 1.30 மணியளவில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்ற போது, வாகனத் தரிப்பிடம் எரிந்து கொண்டிருந்தது.
அவசர சேவைகள் விரைந்து செயற்பட்டதால், அருகில் இருந்த வீட்டிற்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
எனினும், வாகன தரிப்பிடம் முற்றிலும் சேதமடைந்தது.
ஆயிரக்கணக்கான பிராங்குகளுக்கு சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது.
மூலம்- Bluewin

