மோசடி குறித்து, சூரிச் கன்டோனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு, சூரிச் கன்டோனல் பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக வாடிக்கையாளர்களின் ” PhotoTan” மீண்டும் செயற்படுத்துமாறு கோரும், கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது.
முதல் பார்வையில், கடிதம் உண்மையானது போல் தோன்றுகிறது.
ஆனால் ZKB பெயரில் அனுபப்பப்படும் அவ்வாறான கடிதங்கள் போலியானவை.
அந்த QR குறியீட்டை ஸ்கான் செய்யும் எவரினது தனிப்பட்ட வங்கிக் கணக்கை மோசடி செய்பவர்களால், நேரடியாக அணுக முடியும் என்றும் சூரிச் கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.
மூலம்- zueritoday

