0.8 C
New York
Monday, December 29, 2025

குழாய் நீரை அருந்த வேண்டாம்.

Uster இன் சில பகுதிகளில், குடிநீர் மாசுபட்டுள்ளதாகவும் அதனைக் குடிக்க வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Riedikon, Niederuster, Werrikon மற்றும் Nänikon. ஆகிய இடங்களில் குழாய் நீரைக் குடிப்பதை தவிர்க்குமாறு நகர சபை  அறிவுறுத்தியுள்ளது.

குடிநீர் விநியோகத்தை சீரமைக்க எனர்ஜி உஸ்டர் முழு வேகத்தில் செயற்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று Uster நகரம் நேற்று மாலை அறிவித்தது.

அருந்துவதைத் தவிர, கழுவுதல் அல்லது உணவுகளைத் தயாரிக்க அல்லது சிகிச்சையளிக்க குழாய் நீரைப் பயன்படுத்தக்கூடாது.

பாத்திரங்களை கழுவுவதற்கும் இதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

நகரின் மற்ற பகுதிகளில் உள்ள குழாய் நீர் மாசுபடவில்லை.

இருப்பினும், குடிநீரைப் பெற குழாய் நீரை கொதிக்க வைக்கலாம்.

அத்துடன் மினரல் வாட்டரை மாற்றாக பயன்படுத்தவும நகரசபை பரிந்துரைக்கிறது.

எனர்ஜி உஸ்டர் அனைத்தையும் தெளிவுபடுத்தும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பொருந்தும்.

மாசுபாட்டிற்கான காரணத்தை நகராட்சி அதிகாரிகள் குறிப்பிடவில்லை. அவர்கள் இன்று கூடுதல் தகவல்களை  தருவதாக உறுதியளித்தனர்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles