3 C
New York
Monday, December 29, 2025

கோர விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் பலி.

Wattwil மற்றும் Ricken இடையே நேற்று மாலை தபால் பேருந்தும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில், 9 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

நேற்று மாலை 4:15 மணியளவில், கார் ஒன்று தபால் பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய பின்னர் மற்றொரு கார் மீது மோதியது.

இதில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

76 வயதான ஆண், 75 வயதான பெண், மற்றும் 9 வயது குழந்தை ஆகியோரே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தபால் பேருந்து சாரதியும் காயமைடைந்தார்.  அந்த பேருந்தில் பயணித்த பலர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

St.Gallen  பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles