கிளிநொச்சி -ஆனையிறவு இராணுவ சோதனை சாவடிக்கு அருகே, இன்று காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

