Frauenfeld நகரின் மையத்தில், முன்னர் இராணுவப் பயன்பாட்டில் இருந்த கட்டடம் இன்று அதிகாலை தீயில் எரிந்து நாசமானது.
இன்று அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது என்று Thurgau கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
ரயில் நிலையத்திலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்த வழியாக சென்றவர்கள் அவசர சேவைக்கு தகவல் தெரிவித்தனர்.
சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதால், விரைவாக தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.
அவசர சேவைகளால் கட்டடத்தில் இருந்து சுமார் 20 முள்ளம்பன்றிகளை மீட்க முடிந்துள்ளது.
உள்ளே வேறு ஏதேனும் விலங்குகள் இருந்தனவா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
முன்னர் இராணுவத்தினரின் முகாமாக இருந்த இந்த மரக் கட்டடம், நகரசபை களஞ்சிய அறையாக பயன்படுத்தப்பட்டதுடன், முள்ளம்பன்றி மீட்பு மையத்தையும் கொண்டிருந்தது.
மூலம் – Zueritoday

