சூரிச்சில் இன்று 31வது தெரு அணிவகுப்பு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் சுமார் ஒரு மில்லியன் டெக்னோ இசை ரசிகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வு அதிகாரப்பூர்வமாக இன்று மதியம் 1 மணிக்கு தொடங்கும்.
பிற்பகல் 2 மணிக்கு, லவ்மொபைல்ஸ் என்று அழைக்கப்படும் 28 மிதவைகள், துறைமுகத்தைச் சுற்றி இரண்டு கிலோமீட்டர் பாதையில் புறப்படும்.
“முன்னுரிமை: சகிப்புத்தன்மை” என்பது இந்த 31வது தெரு அணிவகுப்பின் தொனிப் பொருள் ஆகும்.
லவ்மொபைல்ஸ் செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள எட்டு மேடைகள் உள்ளிட்ட இடங்களில், 200க்கும் மேற்பட்ட டிஜேக்கள் விழாக்களில் பங்கேற்கவுள்ளனர்.
மாலையில், நகரிலுள்ள கிளப்களில் நிகழ்வு தொடர்கிறது.
சூரிச் செல்வதற்கு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அமைப்பாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஜெனிவா மற்றும் லொசேன் உள்ளிட்ட சுவிட்சர்லாந்து முழுவதிலுமிருந்து சிறப்பு ரயில்கள் இன்று பிற்பகல் சூரிச் நோக்கிச் செல்லும்.
மக்கள் வீடு திரும்புவதற்காக அவர்கள் இரவிலும் சேவையில் ஈடுபடுவார்கள்.
தெரு அணிவகுப்பு சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதால், அனைத்து கழிவுகளும் மறுசுழற்சி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo

