4.8 C
New York
Monday, December 29, 2025

பாரிய தீவிபத்தில் கரவன்கள், பங்களாக்கள் நாசம்.

Winterthur இல் உள்ள Schützenweiher முகாம் தளத்தில் நேற்று பிற்பகல் 4 மணியளவில் ஏற்பட்ட  தீ விபத்தில், பல கரவன்கள் மற்றும் பங்களாக்கள் அழிந்து போயுள்ளன.

எனினும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Schützenweiher முகாம் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதை Winterthur நகர பொலிசார் உறுதி செய்தனர்.

ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் அங்கு விரைந்திருந்தன.

நான்கு முறை பலத்த சத்தம் கேட்டதாகவும், தீ விபத்துக்கு எரிவாயு கொள்கலன்கள் வெடித்தது காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பல எரிவாயு கொள்கலன்கள்  வெடித்தன என்பதை உறுதிப்படுத்திய பொலிசார், மாலையில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றும் கூறினர்.

பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மற்றும் முகாம் வளாகத்தில் இருந்த விருந்தினர்கள் அனைவரும் சரியான நேரத்தில் பாதுகாப்பாக வெளியேறினர்.

தீவிபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles