21.6 C
New York
Friday, September 12, 2025

அதிகளவு முட்டை இறக்குமதி.

செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அதிகளவு முட்டைகள் சுவிட்சர்லாந்திற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளது.

வரும் மாதங்களில் சுவிட்சர்லாந்தில் நுகர்வுக்கான முட்டை விநியோகத்தை உறுதி செய்வதற்காக இறக்குமதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று பொருளாதார அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.

முட்டைகள் இறக்குமதிக்கான ஒதுக்கீடு 7,500  தொன்கள் அதிகரித்து 24,928 தொன்களாக உயர்த்தப்பட உள்ளது.

இந்த ஒதுக்கீடு அதிகரிப்பு ஆண்டு இறுதி வரை மட்டுமேயாகும்.

கடந்த பத்து ஆண்டுகளில் உள்நாட்டு முட்டை உற்பத்தி சுமார் 35% அதிகரித்துள்ளது என்றாலும், தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் இறக்குமதிகள் தேவைப்படுகின்றன.

2022 ஆம் ஆண்டில், சுவிசில் ஒரு நபருக்கு 186 முட்டைகள் தேவைப்பட்டன.  இது முந்தைய ஆண்டை விட ஒன்பது முட்டைகள் குறைவாக இருந்தாலும், 2019 ஆம் ஆண்டை விட இரண்டு அதிகமாகும்.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles