இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இன்று நணபகலுடன் கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை முடிந்த நிலையில், இன்று காலையில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 4 பேர் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள் நாளை காலை 9 மணிக்கும் 11 மணிக்கும் இடையில் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய முடியும்.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் அதிகபட்ச வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பது இதுவே முதல்முறையாகும்.