Wihalden சுரங்கப்பாதையில் பல கார்கள் மற்றும் ட்ரக் என்பன ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
எச் 16 நெடுஞ்சாலையில், சில நாட்களுக்கு முன்னர் 3 பேர் கொல்லப்பட்ட விபத்து நடந்த நிலையில் இந்த மோசமான விபத்து இடம்பெற்றுள்ளது.
Wil இல் இருந்து Wattwil நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, சுரங்கப்பாதையில் இருந்து இடதுபுறம் செல்ல முயன்ற போது எதிரே வந்த ட்ரக்குடன் மோதியுள்ளது.
அத்துடன் மற்றொரு காரும் மோதியுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மற்றொரு பெண் காயமடைந்துள்ளார்.
மூலம் -Zueritoday