Muotathal இல் நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்தது.
Muotathal இல் இருந்து, Pragel Pass நோக்கி சென்று கொண்டிருந்த கார், Bödmeren பகுதியில் நிறுத்தப்பட்ட போதே திடீரென தீப்பற்றியது.
சாரதி தீயை அணைக்க முயன்ற போதும், முடியாத நிலையில், தீயணைப்பு படையினர் உதவிக்கு விரைந்து, தீயைக் கட்டுப்படுத்தினர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே கார் தீப்பற்றியதாக கூறப்படுகிறது.
மூலம்- zueritoday.