சுவிற்சர்லாந்தின் அப்பிள் மற்றும் பியேர்ஸ் அறுவடை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிகமாக இருக்கும் என, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பு தெரிவிக்கின்றது.
இந்த ஆண்டு அப்பிள் அறுவடை 103,589 தொன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டை விட 3% அதிகமாக இருக்கும் என்று சுவிஸ் பழ சங்கம் தெரிவித்துள்ளது.
பியேர்ஸ் அறுவடை 16,364 தொன்கள் அல்லது 17% அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அறுவடை விளைச்சலை மதிப்பிடுவதற்காக முதன்முறையாக உருவாக்கப்பட்ட இந்த செயலி, இந்த பகுப்பாய்வைச் செய்தது என்று சங்கம் தெரிவித்துள்ளது.
மூலம் – swissinfo

