நிலநடுக்க ஆபத்துக்கு எதிராக கட்டடங்களை காப்புறுதி செய்ய செய்ய வேண்டும் என சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக, அதிகபட்சமாக 0.7% காப்புறுதிச் செலவை வீட்டு உரிமையாளர்கள் ஏற்க வேண்டும் என்றும் சுவிஸ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
சுவிஸ் அரசு 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட உத்தேசித்துள்ளது.
இதன் மூலம், பூகம்பம் ஏற்பட்டால் ஏற்படும் சேதத்தை ஈடுசெய்ய, சுமார் 22 பில்லியன் சுவிஸ் பிராங் கிடைக்கும் என்று பெடரல் கவுன்சில் தெரிவித்துள்ளது.
மூலம்- Swissinfo