போலி கோவிட் மீட்பு மருத்துவச் சான்றிதழ்களை வழங்கிய சுவிட்சர்லாந்து மருத்துவர் ஒருவருக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
78 வயதான குறித்த மருத்துவர் கோவிட்-19 இல் இருந்து மீண்டு விட்டதாக 409 போலிச் சான்றிதழ்களை வழங்கியது தொடர்பாக, St Gallen மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அப்போது அவருக்கு 12 மாத சிறைத்தண்டனையும், 3 ஆயிரம் பிராங் அபராதமும் விதிக்குமாறு அரச சட்டத்தரணி நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.
எனினும், 78 வயதுடைய அந்த மருத்துவருக்கு நிபந்தனை அடிப்படையிலான 12 மாத சிறைத்தண்டனையை மட்டும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
எனினும் இந்த தீர்ப்பு இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.
மூலம்- Swissinfo