சுவிஸ் ரயில்வேயின் இணைய சேவை மற்றும் ரயில் நிலையங்களுடனான இணைப்புகளில் ஏற்பட்ட சிக்கல்களால் நேற்றுக்காலை ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.
ஒரு மென்பொருள் செயற்படாததால் இந்த சிக்கல் ஏற்பட்டது.
பயணச்சீட்டு பெறுவதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டன.
இதனால் ரயில் சேவைகளில் பல இடைநிறுத்தப்பட்டதுடன், இன்னும் சில தாமதமாக இடம்பெற்றது.
நண்பகல் வரை இந்த நெருக்கடி காணப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

