ஜேர்மனியின் மருந்து மற்றும் விவசாய இரசாயன உற்பத்தி குழுமமான, பேயர் நிறுவனம், Basel இல் உள்ள அதன் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளது.
Basel இல் உள்ள பேயர் நிறுவனத்தில் தற்போது 1,000 முழுநேர தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில், 150 பேரை குறைக்க உள்ளது.
இந்த வேலை வெட்டு முக்கியமாக நுகர்வோர் சுகாதாரப் பிரிவை பாதிக்கும். 2025ஆம் ஆண்டுக்குள் இது முடிக்கப்பட வேண்டும்.
நெருக்கடியில் இருப்பதாக கூறப்படும் பேயர் குழுமம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உலகளவில் 3,000 க்கும் மேற்பட்ட வேலைகளை குறைத்துள்ளது.
மூலம்- Swissinfo