சூரிச் விமான நிலையத்தில் இருந்து அயர்லாந்தின் Cork நகருக்குச் செல்லவிருந்த Edelweiss விமானம் புறப்படுவது திடீரென நிறுத்தப்பட்டது.
இதற்கான காரணம் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை 2.40 மணியளவில் குறித்த விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
விமானம் இயக்கப்பட்டு சற்று நேரத்தில் இது நிறுத்தப்பட்டு தொழில்நுட்பக் குழுவினரின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.
161 பயணிகள் அந்த விமானத்தில் இருந்தனர். சுமார் ஒரு மணிநேரம் கழித்து அந்த விமானம், புறப்பட்டுச் சென்றுள்ளது.
மூலம்- 20min