ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சீட்டு 27 அங்குல நீளமும் ஐந்து அங்குல அகலமும் கொண்டதாக இருக்கும் என, அரசாங்க அச்சகர் கங்கானி லியனகே தெரிவித்தார்.
இது இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்காக அச்சிடப்படும் மிக நீளமான வாக்குச்சீட்டாகும்.
கடந்த முறை போலவே அனைத்து வேட்பாளர்களும் வரிசையாக பட்டியலிடப்பட்ட ஒற்றை பந்தியைக் கொண்டதாக இந்த வாக்குச் சீட்டு அமைந்திருக்கும்; இருப்பினும், ஒன்று அல்லது இரண்டு அங்குலம் அதிகமாக இருக்கும்.
நீண்ட வாக்குச் சீட்டு இருந்த போதிலும், வாக்காளர்களுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாது எனவும், ஏனைய தேர்தல்களைப் போன்று வாக்களிக்கும் செயற்பாடுகள் இடம்பெறும்.
எனினும், வாக்குச் சீட்டு இரட்டை வரிசையில் வடிவமைக்கப்பட்டிருந்தால், 13.5 அங்குல நீளத்தில் இருந்திருக்கும்.
தற்போது வாக்குச்சீட்டின் நீளம் அதிகரித்த போதிலும், இது இலங்கை வரலாற்றில் மிக நீளமான வாக்குச்சீட்டு அல்ல என்றும் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.