-0.2 C
New York
Sunday, February 15, 2026

சுவிசில் இருந்து சென்றவர் வவுனியாவில் கொலை.

சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்குச் சென்று ஒருவர் வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

செல்லத்துரை விமலநாதன் (வயது 66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சுவிசில் இருந்து விடுமுறையில் வந்த ஒருவர் வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

அங்கு அவரும் அவரது உறவினரும் நேற்றிரவு இரவு மது அருந்திய நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது, சுவிசில் இருந்து வருகை தந்தவரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் அந்த இடத்திலேயே மரணமடைந்துள்ளார். 

சம்வவ இடத்திற்கு சென்ற கனகராயக்குளம் பொலிஸார் 60 வயது குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

Related Articles

Latest Articles