Zermatt க்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் 12 பிராங் கட்டணத்தை அறவிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
ஹோட்டல்களுக்கு எந்த வருமானத்தையும் கொண்டு வராத சுற்றுலாப் பயணிகளே, 12 பிராங்குகள் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இதுகுறித்து நகராட்சி மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தற்போது ஆலோசித்து வருகின்றனர்.
இதற்கு “கிரீன் டக்” என்று பெயரிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு மட்டும் இந்த வரியில் இருந்து விதிவிலக்குகள் இருக்கும்.
Zermatt இல் ஒருவரைச் சந்திக்கும் நபர்களுக்கும் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
மூலம் -20min

