16.1 C
New York
Friday, September 12, 2025

ஒரே பெயர்களால் குழப்பம் – மாறிச் செல்லும் பொதிகள்.

ஒரே பெயரில் உள்ள வீதிகளின் பெயர்களால், Sirnach TG நகரில் மக்கள் பல ஆண்டுகளாக குழப்பங்களை சந்தித்து வருகின்றனர்.

Wiesenstrasse மற்றும் Bühlstrasse ஆகிய இடங்கள், முன்னர் சுதந்திரமான Busswil மாவட்டத்தில் இருந்து, Sirnach TG நகராட்சியின் ஒரு பகுதியாக மாறியது.

ஏற்கனவே இதே பெயர்களில் இடங்கள் உள்ள போதும், இந்த இடங்களின் பெயர்கள் மாறவில்லை.

ஒரே பெயரில் இரண்டு வீதிகளின் பெயர்கள் இருப்பதால், முகவரிகள் மாறி, பொதிகள், கடிதங்கள் தவறான இடத்தில் ஒப்படைக்கப்படுகின்றன.

ஒரு சந்தர்ப்பததில் அம்புலன்ஸ் கூட தவறான முகவரிக்கு விரைந்தது.

ஆனால், தற்போது, ​​பெயர் மாற்றம் ஒரு பிரச்சினை இல்லை என்று நகர  மேயர் பீட் ஸ்வார்ஸ் தெரிவித்துள்ளார்.

குழப்பத்தைத் தவிர்க்க, இரண்டு கிராமங்களுக்கும் 2011 முதல் வெவ்வேறு குறியீடுகள் உள்ளன.

மறுபெயரிடுவதற்கான அதிகாரத்துவ தடைகள் அதிகம். ஒரு ஒப்புதல் நடைமுறை தேவை, ஆவணங்களில் மாற்றங்கள் மற்றும் நிதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

மூலம்- Bluewin

Related Articles

Latest Articles