Schaffhausen கன்டோனல் கவுன்சில் வீதிப் போக்குவரத்து வரிகளுக்கான புதிய கணக்கீட்டு மாதிரிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆண்டுதோறும் கணக்கிடப்படும் இந்த வரி அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும்.
கன்டோனல் கவுன்சில், வீதிப் போக்குவரத்து வரிகள் தொடர்பான சுமார் 60 ஆண்டுகால சட்டத்தில், புதிய திருத்தத்தை முன்வைத்திருக்கிறது.
இரண்டாம் வாசிப்பின் போது, இதற்கு ஆதரவாக 39 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ,ஒருவர் வாக்களிக்கவில்லை.
Schaffhausen வாக்காளர்கள்தான் இந்த வரி கணிப்பீடு குறித்து இறுதி முடிவை எடுக்க வேண்டும்.
மூலம்- zueritoday

