Basel-Landschaft கன்டோனில் பல பகுதிகளில் நேற்றுமாலை மின்சார விநியோகம் திடீரெனத் தடைப்பட்டது.
Muttenz, Reinach, Münchenstein மற்றும் Arlesheim நகராட்சிகள் , Binningen, Reinach மற்றும் Birsfelden இன் சில பகுதிகள் இதனால் பாதிக்கப்பட்டன.
இரண்டு மணி நேரத்திற்குப் பின்னரே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.
நேற்று மாலை 5.08 மணிக்கு ஏற்பட்ட இந்த மின்தடையினால், பத்தாயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியிருந்தன.
எனினும், 7.40 மணியளவில் மீண்டும் மின்விநியோகம் மீளவும் வழங்கப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
மூலம் – 20min

