சூரிச், மாவட்டம் 8இல் கார் மீது அம்புலன்ஸ் மோதிய விபத்தில் காரில் இருந்த இருவர் காயம் அடைந்தனர்.
அவசர அழைப்பு ஒன்றை அடுத்து, Männedorf Hospital மருத்துவமனையில் இருந்து அம்புலன்ஸ் Bellerivestrasse சைரன் ஒலித்தபடி வேகமாகச் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
Tiefenbrunnen ரயில் நிலையம் அருகே, அந்த அம்புலன்ஸ் கார் ஒன்றுடன் மோதியது.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இதில் காரில் இருந்து இரண்டு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மூலம் – 20min

